இந்த கோர்ஸ்களில் உள்ளது
நாம் கோவிலுக்கு போகிறோம். கோவிலுக்குள் நுழைந்தவுடன் நல்ல மணம் வருகிறது. அது எங்கிருந்து வருகிறது? இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பூ, கற்பூரம், சந்தனம், சாம்பிராணி மற்றும் ஊதுபத்தியில் இருந்து வருகிறது. இதில் நாம் கடைசியாக கூறிய ஊதுபத்தியை நாம் வீட்டிலும் ஏற்றி வைக்கிறோம். சிறிது நேரத்தில் வீடும் நல்ல மணமாக மாறிவிடுகிறது. இது எப்படி நடக்கிறது? ஒரு தென்னங்குச்சியைப் போல் உள்ள இதிலிருந்து எப்படி நல்ல மணம் வருகிறது?
அதற்கு காரணம் வெவ்வேறு வாசனை திரவியங்கள். ஊதுபத்தி ப்ரீமிக்ஸ் முதலில் தயார் செய்து பின்னர் அதை தேவைக்கு ஏற்ப வெவ்வேறு வாசனை திரவியங்களில் முக்கி எடுத்து காய வைப்பார்கள். காய்ந்ததும் அதன் வாசம் ப்ரீமிக்ஸில் ஒட்டி கொள்ளும். இதுவே நாம் ஊதுபத்தி ஏற்றி வைக்கும் போது வரும் வாசனைக்குக் காரணம். ஊதுபத்தி என்பது 2 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்கிறது. இதற்கான வியாபார வாய்ப்புகளும் அதிகம். வாருங்கள் ஊதுபத்தி பற்றி தொடக்கம் முதல் விற்பனை வரை உள்ள நுணுக்கங்களை இந்த கோர்ஸில் அறிந்துகொள்வோம்.