இந்த கோர்ஸ்களில் உள்ளது
நான் என்றோ ஒரு புத்தகத்தில் படித்தது. ஒரு அழகு நிலையத்தின் பலகையில் இப்படி எழுதி இருந்தார்களாம் "கவனம் எங்கள் நிலையத்தில் இருந்து வரும் அழகான பெண் உங்கள் பாட்டியாக கூட இருக்கலாம்". ஆம். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்களை அழகுபடுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். நமது தமிழில் ஒரு பழமொழி உண்டு ஆள் பாதி ஆடை பாதி. பெருகிவிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் அது சார்ந்த வேலைவாய்ப்புகளும் மக்களுக்கு போதுமான வருமானத்தை அளிக்கின்றன. மற்றவர்கள் முன்பு நீங்கள் பேசுவதற்கு முன்பே உங்கள் தோற்றம், ஆடை பேசிவிடும். எனவே, தங்களை அழகுபடுத்திக்கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தப் பன்னாட்டு வணிகம் பெருகிவிட்ட காரணத்தினால் எப்போதும் அழகாக காட்சியளிப்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அழகாக இருப்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. மக்கள் இயற்கை பொருட்களை நாடி செல்வதால், தற்போது சருமத்திற்கு, முடிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பக்க விளைவுகள் அற்ற இயற்கையான அழகு சாதனப் பொருட்களும் கிடைக்கின்றன. இந்தப் பாடத்தில் அழகு நிலைய தொழில் வாய்ப்பு பற்றி அறிவோம் வாருங்கள்.