4.7 from 62.9K மதிப்பீடுகள்
 4Hrs

தொழில் கட்டமைப்பு கோர்ஸ் - உங்கள் தொழில் மற்றும் நிதிப் பயணத்தைத் தொடங்குங்கள்

உங்கள் கனவு தொழிலை உருவாக்குவதற்கான படிப்படியான கையேடு

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

Top Career Building Course in India
 
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(29)
விவசாயம் கோர்சஸ்(33)
தொழில் கோர்சஸ்(47)
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
4Hrs
 
பாடங்களின் எண்ணிக்கை
9 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
தொழில் வழிகாட்டுதல், Completion Certificate
 
 

ffreedom App உள்ள எங்களது "தொழில் கட்டமைத்தல்" கோர்ஸ்  வரவேற்கிறோம்! இந்த கோர்ஸ் உங்கள் தொழில்முறை திறனை அறியவும் உங்கள் கனவுகளின் வாழ்க்கையை உருவாக்க உதவும் வகையிலும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் தொழிலைத் தொடங்குவதாக இருந்தாலும் அல்லது மாற்றம் செய்ய விரும்பினாலும், இந்தக் கோர்ஸ் நீங்கள் வெற்றிபெற தேவையான கருவிகளையும் அறிவுத்திறன்களையும்  வழங்கும்.

இந்தக் கோர்ஸில் இலக்கு அமைத்தல், நெட்வொர்க்கிங் மற்றும் ரெஸ்யூம் கட்டமைத்தல் போன்ற முக்கிய தலைப்புகளை உள்ளடக்கிய பல மாடுல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாடுலிலும், உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்ல நீங்கள் உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய நடைமுறை சார்ந்த, செயல்படக்கூடிய உத்திகளைக் கற்றுக்கொள்வீர்கள்.

ffreedom App இன் நிறுவனர் & முதன்மை செயல் அதிகாரி திரு. C S சுதீருடன் இணைந்திடுங்கள். அவர் நிதி சுதந்திரத்திற்கான உங்கள் பயணத்திற்கு வழிகாட்டுகிறார். அவரது நிபுணத்துவம், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், உங்கள் நிதியைக் கட்டுப்படுத்தவும், உங்களுக்கும் உங்கள் சமூகத்திற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க கற்றுக்கொள்வீர்கள்.

ஒரு வெற்றிகரமான தொழிலை உருவாக்குவதற்கான மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று தெளிவான, அடைந்திடக்கூடிய இலக்குகளை அமைப்பது. இந்தக் கோர்ஸில், உங்கள் தொழில்முறை ஆசைகளை நோக்கி நீங்கள் கவனம் செலுத்தி உத்வேகம் மற்றும் கவனத்துடன் இருக்க உதவும் ஸ்மார்ட் இலக்குகளை எப்படி அமைப்பது என்பதை நாங்கள் உங்களுக்குக் கற்பிப்போம். நெட்வொர்க்கிங் என்பது ஒரு வெற்றிகரமான தொழிலை உருவாக்குவதற்கான மற்றொரு முக்கிய அங்கம். இந்தக் கோர்ஸில், தொழில்முறை நெட்வொர்க்கை எப்படி உருவாக்குவது மற்றும் பராமரிப்பது மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்க உங்கள் இணைப்புகளை எப்படி ஒரு திறவுகோலாக பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

ரெஸ்யூம் உருவாக்குவதற்கான அடிப்படைகளை நாங்கள் கற்றுத்தருவோம். இதில் பணி அமர்த்துபவர்கள் கவனிக்கும் வகையில் மிகவும் சிறப்பான ரெஸ்யூமை எழுதுவது எப்படி என்பதை அறியுங்கள்.  தனித்துவமான வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப உங்களின் விண்ணப்பத்தை வடிவமைப்பதற்கும் போட்டிகள் நிறைந்த வேலைவாய்ப்பு சந்தையில் தனித்து நிற்பதற்கும் தேவையான உதவிக்குறிப்புகள் மற்றும் உத்திகளை வழங்குவோம். இந்தக் கோர்ஸ் முடிவில், உங்கள் தொழில் வாழ்க்கையை கட்டுப்படுத்தவும், நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கவும் தேவையான திறன்களும் அறிவுத்திறன்களும் உங்களிடம் இருக்கும். இன்றே பதிவு செய்து, உங்கள் கனவு தொழிலை உருவாக்குவதற்கான பாதையைத் தொடங்குங்கள்!

 

யார் கோர்ஸை கற்கலாம்?

  • தங்கள் தொழிலைத் தொடங்கும், உறுதியான எதிர்கால வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க விரும்பும் தனிநபர்கள்

  • தொழில் மாற்றம் அல்லது புதிய துறைக்கு மாற விரும்பும் தொழில் வல்லுநர்கள்

  • ஒரு வெற்றிகரமான தொழிலை உருவாக்குவதற்கான நடைமுறை, செயல்படக்கூடிய உத்திகளைக் கற்றுக்கொள்ள விரும்பும் மக்கள் 

  • தங்கள் விண்ணப்பம் & நேர்காணல் திறன்களை மேம்படுத்தவும், வேலை பெறும் வாய்ப்புகளை அதிகரிக்க விரும்பும் வேலை தேடுபவர்கள் 

  • தங்கள் தொழிலைக் கட்டுப்படுத்தவும், அவர்கள் விரும்பும் எதிர்காலத்தை அமைக்க விரும்பும் அனைவரும்

 

கோர்ஸில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

  • ஸ்மார்ட் இலக்குகளை எப்படி அமைப்பது மற்றும் உங்கள் தொழில்முறை ஆசைகளை அடைவதற்கான தெளிவான திட்டத்தை உருவாக்குதல்

  • நெட்வொர்க்கிங்கின் முக்கியத்துவம் மற்றும் தொழில்முறை நெட்வொர்க்கை எப்படி உருவாக்குவது மற்றும் பராமரிப்பது

  • குறிப்பிட்ட வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப ரெஸ்யூமை உருவாக்குதல், உங்கள் ரெஸ்யூமை சிறப்பாக வடிவமைப்பதற்குமான நடைமுறை உத்திகள்

  • போட்டிகள் நிறைந்த வேலைவாய்ப்பு சந்தையில் தனித்து நிற்பதற்கும், பணியமர்த்தப்படும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான உத்திகள்

  • கற்றல் & நடைமுறை திறன்கள் வழியாக நீங்கள் விரும்பும் வாழ்க்கையை எப்படி கட்டுப்படுத்துவது & எதிர்காலத்தை உருவாக்குவது?

 

தொகுதிகள்

  • உங்கள் திறனைத் அறியுங்கள்: தொழில் வளர்ச்சிக்கான தொடக்க கையேடு - ஸ்மார்ட் இலக்குகளை எப்படி  அமைப்பது மற்றும் உங்கள் தொழில்முறை ஆசைகளை அடைவதற்கான தெளிவான திட்டத்தை உருவாக்குவது எப்படி என்பதை அறியுங்கள்.
  • தோல்வி சுழற்சியை உடைத்தல்:  தோல்வியடைவதற்கான 4 முக்கிய காரணங்களைப் புரிந்துகொள்ளுதல் - நாம் தோல்வியடைவதற்கான முக்கிய காரணங்களைப் புரிந்துகொண்டு, அவற்றை எப்படி  எதிர்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
  • தவிர்க்க முடியாத உந்துதல்:  நிறுத்தமுடியாத  உந்துதலுக்கான    ரகசியங்களைக் கண்டறியுங்கள் - உந்துதலைக் குறைய விடாமல் பார்த்துக்கொள்வது மற்றும் கடந்த கால தடைகளை ஒதுக்குதல்  போன்றவற்றின் இரகசியங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
  • நேர மேலாண்மையில் நிபுணத்துவம் பெறுதல்: ஒவ்வொரு நிமிடத்தின் மதிப்பையும்  அதிகப்படுத்துதல் - உங்கள் நேரத்தை திறம்பட நிர்வகித்து நேரத்தின் மதிப்பை அதிகரிப்பது எப்படி என்பதை அறிக.
  • ஒரு நிபுணராக மாறுதல்: உங்கள் துறையின்  அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொள்ள தேவையான உத்திகள் - உங்கள் துறையில் நிபுணராக மாறுவது மற்றும் புதிய திறன்கள் மற்றும் அறிவுத்திறனில் நிபுணத்துவம் பெறுவது எப்படி என்பதை அறியுங்கள்.
  • உங்கள் ஆதரவு அமைப்பைக்  கட்டமைத்தல்: உங்கள்  வாழ்க்கையில் சரியான நபர்களை எப்படி  கண்டறிவது? உங்களது தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை ஆதரிக்கும் சரியான நபர்களுடனான  தொடர்புகளை எப்படி அடையாளம் கண்டு வளர்ப்பது என்பதை  அறிந்துகொள்ளுங்கள்.
  • இன்றைய நவீன உலகுடன்   தொடர்பில்   இருத்தல்: புதிய எண்ணங்களைக்  கண்டறிந்து  மேம்படுத்துவதற்கான  உதவிக்குறிப்புகள் - இன்றைய உலகில் எப்படி தொடர்புடையதாக இருப்பது   மற்றும் முன்னணியில் இருப்பதற்கு எப்படி புதிய யோசனைகளை உருவாக்குவது என்பதை அறியுங்கள்.
  • வாழ்க்கையை மாற்றும் பழக்கங்கள்: உங்கள் வாழ்க்கையை வியத்தகு முறையில் மேம்படுத்துவதற்கான  10 எளிய வழிகள் - உங்கள் வாழ்க்கையை வியத்தகு முறையில் எப்படி மேம்படுத்துவது? மற்றும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் 10 பழக்கங்களை அறியுங்கள்.
  • அனைத்து தடைகளையும் தகர்த்தல்: கர்நாடகாவின் ஏடிஜிபி ஆக மாறிய ஜார்க்கண்ட் சிறுவனின் உத்வேகம் அளிக்கும்  கதை - ஒரு ஜார்க்கண்ட் சிறுவன் கர்நாடகாவின் ஏடிஜிபியாக மாற  தடைகளை எப்படி தகர்த்தார் என்பதையும், தடைகளை மீறி எப்படி வெற்றி பெறுவது  என்பதையும் அறியுங்கள்.

 

தொடர்புடைய கோர்சஸ்

 
Ffreedom App

இப்போதே ffreedom app-ஐ பதிவிறக்கம் செய்து, நிபுணர்களால் உருவாக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட கோர்ஸ்களை வெறும் ரூ.399 முதல் பெறுங்கள்.