//=$aboutHtml?>
இந்த கோர்ஸ்களில் உள்ளது
மொத்த கோர்ஸ்களின் நீளம்
5Hrs 48Min
பாடங்களின் எண்ணிக்கை
17 வீடியோக்கள்
நீங்கள் கற்றுக்கொள்வது
காப்பீட்டு திட்டமிடல்,தொழில் வாய்ப்புகள், Completion Certificate
நீங்கள் உலக வணிகச் சந்தையில் கால் பதிக்க விரும்புபவரா? ffreedom App இன் "உள்ளூர் முதல் உலகம் வரை:ஒரு கிராமத்தில் இருந்து தொழில் தொடங்குவதற்கும், வளர்ப்பதற்கான ஒரு நடைமுறை கோர்ஸ்” தங்கள் உள்ளூர் வியாபாரத்தைத் தாண்டி தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்பும் தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கான ஒரு விரிவான கோர்ஸ். இந்தக் கோர்ஸ் உலகளாவிய வணிக மேலாண்மையின் வித்தியாசமான பிம்பத்தைக் கொண்டுள்ளது.
ஒரு கிராமத்திலிருந்து தொழிலைத் தொடங்குவது கடினமானதாக இருக்கலாம். ஆனால், சரியான மனநிலை மற்றும் அணுகுமுறையால் அது சாத்தியப்படும். இந்த ஒரு கிராமத்திலிருந்து உலகளாவிய வணிகம் கோர்ஸ் உங்கள் கிராமத்தின் சிறந்த வணிகத்தைக் கண்டறிதல், சந்தை ஆராய்ச்சியை நடத்துதல் மற்றும் உறுதியான வணிகத் திட்டத்தை உருவாக்குதல் போன்றவற்றை அடையாளம் காண கற்றுக்கொடுக்கும். மேலும், இது ஒரு வலுவான குழுவை உருவாக்கவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், முன்னோடியாக இருக்கவும் கற்றுக்கொடுக்கிறது.
பெரும்பாலான மக்கள் நகரத்தில் ஒரு தொழிலைத் தொடங்க விரும்புகிறார்கள். குறிப்பாக அவர்கள் உலகளாவிய வணிகத்தைத் தொடங்க விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். வசதிகளை எளிதாக அணுகுதல், சிறந்த உள்கட்டமைப்பு போன்ற நன்மைகளே இதற்குக் காரணம். ஆனால், இந்தக் கோர்ஸில், எங்களிடம் 4 வெற்றிகரமான வழிகாட்டிகளான திருமதி.சாயா நஞ்சப்பா, திரு. மதுசூதனன், திரு. மதுசந்தன் மற்றும் திரு. குடுநல்லி விஸ்வநாத், ஒரு கிராமத்திலிருந்து உலகளாவிய வணிகங்களைத் தொடங்கியவர்கள்.
இந்த வழிகாட்டிகள் ஒரு கிராமத்திலிருந்து வணிகம் தொடங்கி கடின உழைப்பு, நிலைத்தன்மை மற்றும் புதுமையான தீர்வுகள் வழியாக உலகளாவிய வெற்றிக்கு வழிவகுக்க உதவுவார்கள். இதில், நீங்கள் அவர்களது பயணத்திலிருந்து கற்றுக்கொண்டு உங்கள் வணிகத்தை கிராமத்திலிருந்து உலகளவில் எடுத்துச் செல்வீர்கள்.
கோர்ஸின் முடிவில், உலகளாவிய அளவில் வணிகத்தை வெற்றிகரமாகத் தொடங்கி வளர்க்க தேவையான அறிவு மற்றும் அறிவுத் திறன்கள் மற்றும் சர்வதேச வணிகத் தொடர்புகளின் நெட்வொர்க்கைப் பெறுவீர்கள். இந்த கோர்ஸ் வழியாக, உலகளாவிய தொழில் தொடங்கும் உங்கள் கனவை நனவாக்கி கொள்ளுங்கள்.
யார் கோர்ஸை கற்கலாம்?
-
உள்ளூர் சமூகம் தாண்டி தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்பும் தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள்
-
சர்வதேச வணிகம் மற்றும் உலகளாவிய செயல்பாடுகள் துறை சார்ந்த வல்லுநர்கள்
-
தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க ஆர்வமுள்ள & உலகளாவிய ரீதியில் செல்வதற்கான செயல்முறையைப் பற்றி அறிய விரும்பும் நபர்கள்
-
சர்வதேச அளவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்பும் சிறிய & நடுத்தர வணிகங்களின் மேலாளர்கள் மற்றும் தலைவர்கள்
-
வணிகம், சர்வதேச ஆய்வுகள் அல்லது தொழில் முனைவோர் துறை சார்ந்த மாணவர்கள் அல்லது சமீபத்தில் பட்டம் பெற்றவர்கள்
கோர்ஸில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?
-
கண்டறிவதற்கான சந்தை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பற்றி அறியுங்கள்
-
வெவ்வேறு நாடுகளில் வணிகம் செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் இணக்கத்திற்கான தேவைகளைப் புரிந்து கொள்ளுங்கள்
-
சர்வதேச கூட்டாளர்கள் & வாடிக்கையாளர்களுடன் திறம்பட தொடர்பு கொள்வது பேச்சுவார்த்தை நடத்துவதற்கான உத்திகளைப் பெறுங்கள்
-
ஒரு மாறுபட்ட, உலகளாவிய குழுவை உருவாக்கி நிர்வகிப்பதற்கான நுட்பங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்
-
உங்கள் நிறுவனத்திற்கான சிறந்த சர்வதேச வளர்ச்சி உத்தியை எப்படி தேர்ந்தெடுத்து செயல்படுத்துவது என்பதை அறியுங்கள்
தொகுதிகள்
- உங்கள் கோர்ஸ் வழிகாட்டிகளைச் சந்தியுங்கள் : த்தொகுதியில், கோர்ஸ் முழுவதும் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை நீங்கள் சந்திப்பீர்கள்.
- கிராமத்திலிருந்து தொழில் தொடங்குவதன் நன்மைகள் : இத்தொகுதி ஒரு கிராமப்புற இடம் வழங்கக்கூடிய நன்மைகள், சாத்தியமான வாய்ப்புகள் மற்றும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றி உங்களுக்கு கற்பிக்கும்.
- சமூக ஈடுபாடு & ஆதரவு - இத்தொகுதி சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவம் மற்றும் உள்ளூர் பகுதியில் உங்கள் வணிகத்திற்கான ஆதரவை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி கற்பிக்கிறது.
- கிராமப்புறங்களுக்கான வணிக மாதிரிகள் - இத்தொகுதியில், ஒரு கிராமத்திலிருந்து தொடங்கக்கூடிய வணிகத்தின் வகைகள் & வணிக மாதிரியை தேர்ந்தெடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் பற்றி அறிவீர்கள்.
- நிதி பெறுதல் & நிதி திட்டமிடல் - இத்தொகுதியானது பாரம்பரிய & நிதியுதவி வடிவங்கள் மற்றும் உங்கள் வணிகத்திற்கான நிதித் திட்டத்தை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி உங்களுக்குக் கற்பிக்கிறது.
- பதிவு செய்தல் & சட்டத் தேவைகள் : இந்தத் தொகுதி நிறுவனத்தின் உரிமை மற்றும் பதிவை உள்ளடக்கியது. பல்வேறு நாடுகளில் நிறுவனத்தை நிறுவுதல் மற்றும் இயக்க விதிகள் பற்றி அறியுங்கள்.
- இணங்கி செல்லுதல் & விதிமுறைகள் - இந்தத் தொகுதி உலகளாவிய கார்ப்பரேட் இணக்க விதிகள் பற்றி விளக்குகிறது. இணக்கம் மற்றும் அதன் விளைவுகள் விவாதிக்கப்படும்.
- அரசாங்க உதவி & திட்டங்கள் - இந்தத் தொகுதி கிராமம் சார்ந்த நிறுவனங்களுக்கான அரசு உதவியை விவரிக்கிறது. வணிகத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்.
- வழங்கல் & உள்கட்டமைப்பு - உலகளாவிய வணிகங்களை வழங்கல், போக்குவரத்து எப்படி பாதிக்கிறது மற்றும் இந்தச் சிக்கல்களை எப்படி சமாளிப்பது என்பதை இந்த தொகுதி உங்களுக்குக் கற்பிக்கிறது.
- பணியாளர் அமர்த்துதல் & மேலாண்மை - இந்தத் தொகுதியில், ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் ஒரு தொழில்முறை குழுவை நிர்வகித்தல் உள்ளிட்ட உலகளாவிய வணிகத்தில் மனித வளங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள்.
- டிஜிட்டல் கருவிகள் & தொழில்நுட்பம் - இத்தொகுதியானது உலகளாவிய வணிகத்தில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், அதை எப்படி சிறப்பாக பயன்படுத்தி வணிகச் செயல்பாடுகளை மேம்படுத்துவதை விளக்குகிறது.
- உலகளாவிய சந்தை பகுப்பாய்வு & பிராண்டிங் - ராமத்திலிருந்து செயல்படும் வணிகத்தின் பெருநிறுவன & நுகர்வோர் ஏற்புத்தன்மை, அதற்கேற்ப நிறுவனத்தை எப்படி சந்தைப்படுத்தி பிராண்ட் உருவாக்குவதை விளக்குகிறது.
- சந்தைப்படுத்தல் & ஊக்குவித்தல் - இந்தத் தொகுதி மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங்கின் அடிப்படைகள் மற்றும் உலகளாவிய சந்தையில் உங்கள் வணிகத்தை எப்படி திறம்பட மேம்படுத்துவது என்பதை உள்ளடக்குகிறது.
- செயல்திறன் மதிப்பீடு மற்றும் வளர்ச்சி உத்தி : இத்தொகுதி சர்வதேச விரிவாக்க முயற்சிகள் & நிலையான வளர்ச்சிக்கான உத்திகளின் முதலீடு மீதான திரும்பப்பெறுதல் (ROI) & உலகளவில் வணிக மேம்படுத்துதலை விளக்குகிறது.
- உலகளாவிய விரிவாக்கம் கலாச்சாரத் தழுவல் : வெளிநாட்டு வளர்ச்சி தேர்வை விளக்குகிறது. அதாவது, உரிமையாளர், உரிமம் நேரடி முதலீடு & நிறுவனத்தின் தேவையை எப்படி தேர்வு செய்வது விளக்குகிறது.
- சமூக தாக்கம் மாற்றம் - உலகளாவிய விரிவாக்கத்தின் சாத்தியமான நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்கள் உட்பட வணிகங்களின் சமூக தாக்கம் மற்றும் மாற்றத்தில் இந்தத் தொகுதி கவனம் செலுத்துகிறது.
- முடிவுரை : இத்தொகுதியில், கோர்ஸின் முக்கிய அம்சங்களை மதிப்பாய்வு செய்வீர்கள். மேலும், நீங்கள் கற்றுக் கொண்டதை வணிகத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்பதை விவாதிப்பீர்கள்.