இந்த கோர்ஸ்களில் உள்ளது
கற்கால மனிதன் தாவரங்கள், பழங்களோடு விலங்குகளின் இறைச்சியை உண்டு வந்தான் என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் நம்மிடையே உள்ளது. நாம் உண்ணும் உணவை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று காய்கறிகள், தாவரங்கள், தானியங்கள் சேர்த்து சமைக்கப்படும் சைவ உணவு. மற்றொன்று விலங்குகளின் இறைச்சி மற்றும் முட்டையைக் கொண்டு சமைக்கப்படும் அசைவ உணவு. என்னதான் சைவ உணவு உயர்ந்தது என்று கூறினாலும் அசைவ உணவுக்கான வாடிக்கையாளர் குறைவதே இல்லை.
நல்ல அசைவ உணவைத் தேடி அதிக தூரம் செல்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லாம் அந்த உணவு சுவை செய்யும் மாயம். எனவே, மக்கள் மத்தியில் நல்ல தரமான அசைவ உணவத்திற்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. அசைவ உணவின் சுவை அந்த இறைச்சியை சமைக்கும் பக்குவத்தில் உள்ளது. நன்கு சமைக்கப்பட்ட அசைவ உணவு மிக சிறந்த சுவையைக் கொண்டிருக்கும். அசைவ உணவின் சுவையைக் கூட்டுவதில் மசாலா பொருட்களுக்கும் (சோம்பு, கச கசா, பட்டை, இலவங்கம், இஞ்சி, பூண்டு) ஒரு முக்கிய பங்கு உள்ளது. மேலும், மனிதனின் புரதத் தேவையை அசைவ உணவுகளே பூர்த்தி செய்கின்றன.