இந்த கோர்ஸ்களில் உள்ளது
நீங்கள் கடைக்கு செல்கிறீர்கள். வேண்டிய பொருட்களை வாங்குகிறீர்கள். அவற்றை வீட்டுக்கு கொண்டுவர எந்தப் பை வழங்கப்படுகிறது. பெரும்பாலும் பிளாஸ்டிக் பை. பிளாஸ்டிக், சுற்றுசூழல் ஆர்வலர்கள் வெறுக்கும் ஒரு சொல். ஏனென்றால், இதை நாம் மண்ணில் போட்டால் அது மக்க பல நூறு ஆண்டுகள் ஆகும்.
அரசு பிளாஸ்டிக்கின் தீங்கான விளைவுகளை புரிந்துகொண்டு மக்காத பிளாஸ்டிக்கு தடை விதித்தது. பிளாஸ்டிக் மாற்றாக துணி பைகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. எனினும், இன்றைய தலைமுறையினர் பாரம்பரிய துணி பைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவே விரும்புகின்றனர்.
எனவே, இவற்றுக்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய பொருளால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு அதிக தேவை உள்ளது. சணல் என்பது ஒரு கண்ணபிஸ் சட்டிவா எனப்படும் ஒரு நார் தாவரம். இதை பதப்படுத்தி சணலைப் பெறலாம். இந்திய மற்றும் மாநில அரசுகளின் காதி
நிறுவனங்கள் வழியாக சணலிலிருந்து வெவ்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக பைகள் (வண்ணம் மற்றும் டிசைன்கள் உள்ளவை), தரைவிரிப்புகள், திரைசீலைகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், சணல் ஒரு இயற்கை பொருள் என்பதால் எளிதில் மக்கிவிடுகிறது. எனவே, சணல் சார்ந்த பொருட்களுக்கு நல்ல தேவை உள்ளது