இந்த கோர்ஸ்களில் உள்ளது
உங்கள் நண்பனுக்கு திருமணம். அவனுக்கு பரிசுப்பொருள் கொடுத்துவிட்டு உணவு சாப்பிட செல்கிறீர்கள். முதலில் சிற்றுண்டியை முடித்துவிடுகிறீர்கள். பின்னர் கொஞ்சம் சாதம் வைத்து ரசம் சாப்பிட ஆரம்பிக்கிறீர்கள். ஆஹா! ஏதோ ஒன்று குறைகிறதே என்று எண்ணுகிறீர்கள். பொரியலா? அது ஏற்கனவே உள்ளது. அடடே அது அப்பளம். பின்னர் உணவு வழங்குபவரிடம் அப்பளத்தைக் கேட்டு வாங்கி திருப்தியாக உண்கிறீர்கள். பொதுவாக கல்யாணம் என்றாலே அந்த அப்பளத்தை வைத்து சாப்பிட்டால் தான் அனைவருக்கும் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.
குழந்தைகளுக்கு உணவு பிடிக்கிறதோ இல்லையோ அப்பளம் கண்டிப்பாக பிடிக்கும். குழந்தைகள் நன்றாக உணவு சாப்பிட அப்பளம் கண்டிப்பாக இருக்க வேண்டும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அப்பளம் நிச்சயம் பிடிக்கும். ஒரு சிலர் அப்பளம் இருந்தால் தான் உணவே சாப்பிடுவார்கள். தற்போது வெவ்வேறு அளவுகள், வடிவங்கள் மற்றும் சுவைகளில் அப்பளங்கள் கிடைக்கின்றன. குறைவாக எண்ணெய் உறிஞ்சும் டயட் அப்பளமும் கிடைக்கிறது. அப்பளம் உணவின் சுவையைக் கூட்டுகிறது. எனவே, அப்பளத்திற்கான தேவை அதிகரித்து உள்ளது. வாருங்கள் இந்த கோர்ஸில் அப்பளத் தயாரிப்பு பற்றி அறிந்துகொள்வோம்.