இந்த கோர்ஸ்களில் உள்ளது
ராம் மற்றும் சீதா புதுமண தம்பதிகள். அவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. அவர்கள் இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். சில பல தவிர்க்க முடியாத காரணத்தினால் சீதாவின்
அம்மா அதாவது ராமின் மாமியார் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். ராம் மற்றும் சீதாவால் விடுப்பும் எடுக்க முடியவில்லை. இப்போது யார் குழந்தையைப் பார்த்துகொள்வார்கள்? 21 ஆம் நூற்றாண்டில் இதற்காகவே மழலையர் பள்ளி மற்றும் பகல் நேர பராமரிப்பு மையங்கள் உள்ளன.
தற்போது முன் பள்ளி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையம் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது. வீட்டிலேயே வளரும் குழந்தைகளைத் திடீர் என்று பள்ளியில் சேர்த்தால் அவர்கள் அழுவார்கள், அடம்பிடிப்பார்கள். அதற்காகவே ஒரு முன்னோட்டம் போல முன் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு குழந்தைகள் விளையாட்டு மூலம் படிக்கக் கற்றுக்கொள்வார்கள். பிற குழந்தைகளுடன் பழகுவார்கள். வெளியுலகத்தைப் பற்றி தெரிந்துகொள்வார்கள். எனவே, ஒரு உண்மையான பள்ளியில் சேர்க்கும்போது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவருக்கும் எளிதாக இருக்கும். வாருங்கள் அதை பற்றி மேலும் அறிந்துகொள்வோம்.