இந்த கோர்ஸ்களில் உள்ளது
இந்த கோர்ஸில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் எதற்காக மற்றும் யாருக்காக உருவாக்கப்பட்டது? என்று நன்றாக கற்றுக்கொள்ளலாம். இது ஒரு கடன் சார்ந்த மானிய திட்டம். இந்த கோர்ஸில் இந்த பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் உங்கள் தொழிலை தொடங்க முதலீடு எப்படி இருக்க வேண்டும்? என்றும் வங்கியில் எவ்வளவு கடன் கிடைக்கும்? என்றும் அதில் எவ்வளவு தொகை மானியமாக கிடைக்கும்? என்றும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்த கோர்ஸில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் நோக்கம் என்ன? என்று நன்கறிந்து கொள்வீர்கள்.
மேலும், இந்தத் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? யாரை அணுகுவது? அதற்கான தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் அல்லது சான்றுகள் என்னென்ன? என்பது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்வீர்கள். இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளர் பெறக்கூடிய மானியம் என்ன? எவ்வளவு தொகை கடனாக கிடைக்கும்? திருப்பி செலுத்தும் காலம் போன்றவை பற்றி அறிந்துகொள்ளலாம். பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியான தொழில்கள் மற்றும் துறைகள் பற்றி அறிந்துகொள்ளலாம்.