இந்த கோர்ஸ்களில் உள்ளது
ஒருவரால் பயன்படுத்தப்பட்ட காரை பயன்படுத்தப்பட்ட கார் என்று சொல்கிறோம். புதிய காரை விட இதன் விலை ஒப்பிட்டு அளவில் குறைவு. புதிய கார்கள் சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களுடன் வருகின்றன. மேலும், அவை அதிக விலையில் விற்கப்படுகிறது. பயன்படுத்திய கார்கள் பொதுவாக மலிவான விலையில் விற்கப்படுகிறது. ஏனெனில், அவற்றின் ஆரம்ப ஆண்டுகளில் அதிக பயன்பாட்டில் இருந்திருக்கும். அதனால் அதன் மதிப்பும் குறைவாக இருக்கும். அனைவராலும் அதிக தொகை செலுத்தி புதிய கார் வாங்க முடியாது. எனவே, அவர்களுக்கு ஒரு பயன்படுத்திய கார் வாங்குவது எளிதாக இருக்கும். இந்த கோர்ஸில் பயன்படுத்திய கார் வணிகத்தை தொடங்குவதால் உங்களுக்கு எப்படி அதிக லாபம் கிடைக்கிறது? என்று கற்றுக்கொள்ளலாம்.