இந்த கோர்ஸ்களில் உள்ளது
முன்னுரை
எந்தவொரு நிகழ்வு அல்லது இடத்திற்கும் மக்கள் மிகவும் தயாராக இருப்பதாக உணருவதற்கு ஒப்பனை ஒரு முக்கியமான துணைப் பொருளாகும். ஒப்பனை என்பது ஒரு கலை. ஒப்பனை என்றால் என்ன என்பதை இந்த கோர்ஸில் முழுமையாக அறிந்து கொள்வீர்கள். ஒப்பனையில் எத்தனை வகை இருக்கிறது என்றும் இந்த கோர்ஸில் நன்றாக அறிந்து கொள்வீர்கள். ஒப்பனை செய்ய என்னென்ன பொருட்களை உபயோகிக்கலாம் என்றும் அந்த பொருட்களை எங்கு வாங்குவது என்றும் இந்த கோர்ஸில் நன்றாக அறிந்து கொள்ளலாம்.
பல ஒப்பனைகள் தங்கள் தோற்றத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், அதைக் கொண்டு ஆக்கபூர்வமாகவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாக அமைகிறது. ஒப்பனை பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்றும் இந்த கோர்ஸின் மூலம் கற்றுக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக ஒப்பனை தேவைப்படுவது நமது குறைபாடுகளை மறைக்க அல்ல மாறாக அது நமது சிறந்த அம்சங்களை மேம்படுத்துவதற்கும், நமக்கு முன்னால் உள்ள எந்தவொரு தடைகளையும் துணிவுடன் எதிர் கொள்வதற்கு மிக உதவியாக இருக்கும்.