இந்த கோர்ஸ்களில் உள்ளது
நமது நாட்டின் தொழிலதிபர்களை வரிசைப்படுத்துக என்று உங்கள் ஆசிரியர் கூறுகிறார். யார் பெயரை கூறுவீர்கள்? அம்பானி, அதானி, டாடா, பிர்லா. என்ன இது வெறும் ஆண்கள் பெயராக உள்ளது, ஒரு பெண் பெயர் கூட இல்லை என்று யோசிக்கிறீர்களா? பயோகான் நிறுவனர் கிரண் மசும்தார் போன்று ஒரு சில பெண் தொழில்முனைவோர்களும் இருக்கிறார்கள். மொத்தமாக பார்க்கும்போது இவர்களது எண்ணிக்கை குறைவு.
எனவே, அரசு பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பொதுவாக வணிகம் என்றாலே ஆண்கள் என்பது தற்போது மாறி வருகிறது. நமது தாத்தா காலத்தில் குடும்ப நிர்வாகம், நிதி நிர்வாகத்தை பாட்டிகள்தான் செய்தனர். மேலும் வயலில் விளையும் பொருட்களை விற்பது அதன் வரவு செலவுகளை பாட்டிகள்தான் செய்தனர்.
பெண்களுக்கு நிர்வாகத்திறன் என்பது இயல்பாக உள்ளது. நாம் செய்ய வேண்டியது அதை ஊக்கப்படுத்துவதே. மேலும், பெண்கள் முன்னேறினால் அவர்கள் சார்ந்த சமூகமும் முன்னேறிவிடும்.