இந்த கோர்ஸ்களில் உள்ளது
பாரம்பரிய விவசாயம் பற்றி உங்களுக்குத் தெரியும். அடுக்கு விவசாயம் பற்றி தெரியுமா? ஒரே இடத்தில் பல வகையான பயிர்களை எப்படி வளர்ப்பது? அதன் எதிர்கால வாய்ப்புகள் என்ன? உங்கள் அப்பா ஒரு விவசாயி என்று கருதுங்கள். அவர் நிலத்தில் ஒன்று வேர்க்கடலை அல்லது நெல் பயிரிடுகிறார். மீண்டும் ஒரே பயிரை மட்டுமே விளைவிக்கிறார் என்றால் அது அவருக்கு உங்களுக்கு நன்மை பயக்குமா? ஒரு நிலத்தில் ஒரே பயிரை வைக்க வைக்க அந்த நிலத்தின் வளம் முற்றிலும் குறைந்துவிடுவதாக நான் கூறவில்லை அறிவியல் கூறுகிறது. உங்கள் அப்பாவிடம் இந்த முறை உளுந்து மற்றும் கரும்பு பயிரிடுங்கள் என்று கூறுகிறீர்கள் என்று கருதுவோம். அதே நேரம் உங்கள் அப்பா நான் நெல்லும் வேர்க்கடலையும் வைப்பேன் என்று கூறுகிறார் என்றால் இருவரின் ஆசையையும் நிறைவேறுமா?
அடுக்கு விவசாயத்தில் பல வித காய்கறிகள், கீரைகள், மரங்கள், தானியங்கள் என அனைத்து விதமான பயிர்களை வைக்கலாம். எனவே, நீங்கள் அன்றாடம் விளைச்சல் மற்றும் அறுவடை இருக்கும். குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பொருத்தமானது.