இந்த கோர்ஸ்களில் உள்ளது
உங்களுக்கு பொடுகு தொல்லை இருக்கிறதா? அதற்கு ஒரு எளிய தீர்வு உள்ளது. இந்தத் தாவரத்தை வெட்டி அதனுள்ளே இருக்கும் வழவழப்பான பொருளை எடுத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு குறையும். சில சமயங்களில் உடல் உஷ்ணம் அதிகரித்துவிட்டால் அதே வழவழப்பான பொருளை ஜூஸ் போட்டு குடித்தால் உடல் உஷ்ணம் குறைவதைக் காணலாம். அந்தத் தாவரம் என்னவென்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா? ஆம். அது 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடும் கற்றாழை தாவரம். ஆங்கிலத்தில் ஆலோ வேரா (Aloe vera) என்று அழைக்கப்படுகிறது.
தற்போது இயற்கை அழகு சாதனப் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது. கற்றாழை முக பூச்சு, கிரீம்கள், பேஸ் வாஷ்கள் என பல்வேறு பொருட்களில் சேர்க்கப்படுகிறது. கற்றாழைக்கு இயற்கையான குளிர்விக்கும் தன்மை உள்ளது. மேலும், இது உங்கள் தோலை மிருதுவாக்கி பளபளப்பாக மற்றும் திறன் கொண்டது. சருமம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது. இதனை விளைவிப்பது எளிதானது மற்றும் பராமரிப்பு அதிகம் தேவைப்படாது. வாருங்கள் கற்றாழை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.