இந்த கோர்ஸ்களில் உள்ளது
நான் கோவிலுக்கு செல்வேன். நீங்கள்? நாம் கோவிலுக்கு செல்லும்போது என்ன கொண்டு செல்வோம்? பூ, பழம், தேங்காய், ஊதுபத்தி மற்றும் கற்பூரம். ஆஹா! பழம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்பவராக நீங்கள். பொறுங்கள் நான் கூறுவது வாழைப்பழம் அல்ல, எலுமிச்சை பழம். இப்போது கூறுங்கள். உங்களுக்கு இந்தப் பழம் பிடிக்குமா? முக்கால்வாசி பேர் ஓடிவிடுவார்கள். ஏன் இப்படி? அதற்கு காரணம் எலுமிச்சையின் புளிப்பு தன்மை. உங்களுக்குத் தெரியுமா? எலுமிச்சையில் வைட்டமின் C நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
பெரும்தொற்றுக்கு பின் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஏனேன்றால் இதில் உள்ள சிட்ரிக் அமிலம், வைட்டமின் C போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதோடு ரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும். எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவது உடல் எடை குறைக்க உதவுகிறது. தற்போது வீடு உபயோகப் பொருட்கள், ஷாம்புகள், பற்பசைகள் என அனைத்திலும் எலுமிச்சை பயன்படுவதால் அதன் தேவை மற்றும் விலை அதிகரித்துள்ளது. வெயில் காலங்களில் நமக்குத் தாகம் தீர்க்கும் உற்ற நண்பனான எலுமிச்சை விளைச்சல் பற்றி அறிவோம்.