இந்த கோர்ஸ்களில் உள்ளது
உங்கள் குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு என்ன தேவை? பணம். அந்தப் பணத்தைப் பெற உதவுவது என்ன? கண்டிப்பாக கல்வி. நல்ல கல்வி நல்ல வாய்ப்புகளை உருவாக்க உதவுகிறது. அதன் வழியாக அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை உருவாக்க உதவுகிறது.
மேலும், அந்தக் கல்வி அவர்கள் சம்பாதித்த பணத்தை அவர்களது வாழ்நாள் முழுவதும் காப்பாற்றிக்கொள்ள உதவுகிறது.
சிறுவயதிலிருந்தே பணம் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கி பணத்தின் மதிப்பை உணர வைக்க வேண்டும். இது அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்கள் வாழ்க்கைக்கு மிகவும் உதவும். மேலும், பொருளாதார ரீதியாக அவர்கள் யாரையும் சார்ந்து இருக்காத ஒரு நிலையை உருவாக்கும்.
உங்கள் தலைமுறைக்குப் பிறகு உங்கள் குழந்தைகள் தலைமுறை அதற்கு பின்னான உங்கள் வம்சமே மேல்தட்டு வர்க்கம் வகுப்பிற்கு சென்றுவிடும். நீங்கள் சொல்லி தரும் நல்ல விஷயங்கள் வாழையடி வழியாக உங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் வழியாக தொடர்ந்து நீடித்து உங்கள் வம்சத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பது நிச்சயம்