ffreedom app-ல் "அமேசான் பிளிப்கார்ட் மீஷோவில் விற்பனை செய்வது எப்படி” என்ற கோர்ஸிற்கு வரவேற்கிறோம். வளர்ந்து வரும் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் மீஷோ போன்ற முக்கிய ஈ-காமர்ஸ் தளங்களில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பு, எண்ணற்ற தொழில்முனைவோருக்கு வாழ்வாதாரத்தை வழங்கியுள்ளது. சரியான உத்திகள் மூலம், நீங்கள் ஒரு வெற்றிகரமான ஆன்லைன் வணிகத்தைத் தொடங்கி வெற்றி பெறலாம். இந்த கோர்ஸில், இந்த பிரபலமான ஈ-காமர்ஸ் சேனல்கள் மூலம், கைவினைப் பொருட்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களை நீங்கள் எவ்வாறு விற்பனை செய்யலாம் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
எங்கள் வழிகாட்டி, கணபதி V அவர்கள் "மகிழ்ச்சி ஹாண்டிகிராப்ட்ஸின்” உரிமையாளர். 2014 முதல், இவரது நிறுவனம் கைவினைப்பொருட்கள் சந்தையில் முன்னணியில் உள்ளது, உயர்தர ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தயாரிப்புகளை வழங்குகிறது. உள்நாட்டில் தொடங்கி உலகம் முழுவதும் ஏற்றுமதி வரை, கணபதி அவர்களின் பயணம், அர்ப்பணிப்பு மற்றும் ஸ்மார்ட் விற்பனை உத்திகள் எப்படி மிகப்பெரிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த கோர்ஸில், ஈ-காமர்ஸ் தளங்களில் விற்பனை மற்றும் தெரிவுநிலையை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்த தனது நிபுணத்துவ அறிவை அவர் பகிர்ந்து கொள்வார்.
தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் கடையை அமைப்பது மற்றும் ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான தளவாடங்களைத் தேர்வு செய்வது உட்பட, உங்கள் ஈ-காமர்ஸ் பயணத்தை தொடங்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த கோர்ஸில் அறிந்து கொள்வீர்கள்.
நீங்கள் ஒரு தொடக்கக்காரராக இருந்தாலும் சரி அல்லது அனுபவம் வாய்ந்த விற்பனையாளராக இருந்தாலும் சரி, இந்த கோர்ஸ் எளிதில் கற்கக்கூடிய செயல் நுண்ணறிவு மற்றும் நடைமுறை நுட்பங்களை வழங்குகிறது. ஈ-காமர்ஸ் சந்தையில் ஒரு வெற்றிகரமான வணிகத்தை உருவாக்குவது மற்றும் லட்சங்களை சம்பாதிப்பது எப்படி என்பதை அறியும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். இப்போதே கோர்ஸை பாருங்கள்!
இந்த கோர்ஸ் பற்றிய அறிமுகம், இலக்குகள், வழிகாட்டியின் விவரங்கள் மற்றும் ஈ-காமர்ஸ் வணிகத்தின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
ஈ-காமர்ஸின் அடிப்படைகள் மற்றும் அனைத்து வகையான வணிகங்களுக்கும் அது எவ்வாறு வாய்ப்புகளை வழங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அமேசானில் உங்கள் விற்பனையாளர் கணக்கை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்குமான படிப்படியான நடைமுறை வழிகாட்டுதல்.
பிளிப்கார்ட்டில் வெற்றிகரமான விற்பனையாளர் கணக்கை எவ்வாறு உருவாக்குவது மற்றும் நிர்வகிப்பது என்பதை அறிக.
மீஷோ பிளாட்ஃபார்மில் தயாரிப்புகளை திறம்பட விற்பனை செய்வதற்கான முழுமையான நடைமுறை வழிகாட்டுதல்.
ஈ-காமர்ஸ் தளங்களில் போட்டித்தன்மையுடன் இருக்கவும் லாபத்தை அதிகரிக்கவும் முறையான விலை நிர்ணய உத்திகளை பெறுங்கள்.
வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்யவும் இழப்புகளைத் தவிர்க்கவும் சரக்குகளை எவ்வாறு திறமையாக நிர்வகிப்பது என்பதை அறிக.
ஆர்டர்களைக் கையாள்வதற்கும், ஆர்டர்களை பூர்த்தி செய்யும் விருப்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
கட்டணச் செயல்முறைகள், பரிவர்த்தனை கட்டணம் மற்றும் செலவுத் திறனை எவ்வாறு மேம்படுத்துவது பற்றிய விவரங்களை பெறுங்கள்.
பார்வை மற்றும் விற்பனையை அதிகரிக்க சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் விளம்பர உத்திகளை ஆராயுங்கள்.
வாடிக்கையாளர் திருப்தியை உறுதிப்படுத்தவும் விற்பனையை அதிகரிக்கவும் சிறந்த வாடிக்கையாளர் ஆதரவை எவ்வாறு வழங்குவது என்பதை அறிக.
தரவு சார்ந்த முடிவுகளை எடுக்க விற்பனை, செயல்திறன் அளவீடுகள் மற்றும் வாடிக்கையாளர் நடவடிக்கை ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கான விவரங்களை பெறுங்கள்.
வரிகள் முதல் ஒழுங்குமுறைகள் வரை ஈ-காமர்ஸ் நடத்துவதற்கான சட்ட அம்சங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீண்ட கால வெற்றிக்காக உங்கள் ஈ-காமர்ஸ் வணிகத்தை வளர்ப்பதற்கும் விரிவுப்படுத்துவற்கும் உத்திகளைக் கண்டறியவும்.
உங்கள் சொந்த ஈ-காமர்ஸ் வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்குவது மற்றும் [நிர்வகிப்பது என்பதை அறிக.
வெற்றிக்கான முக்கிய புள்ளிகளைப் பெற்று உங்கள் வியாபாரத்தை தொடங்குங்கள்.
- அமேசான், பிளிப்கார்ட் அல்லது மீஷோவில் ஆன்லைன் வணிகத்தைத் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர்
- சிறு வணிக உரிமையாளர்கள் ஈ-காமர்ஸ் மூலம் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்புபவர்கள்
- கைவினைப் பொருட்கள் அல்லது வீட்டுத் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் ஆர்வமுள்ள நபர்கள்
- ஆன்லைனில் பொருட்களை விற்பதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க விரும்புபவர்கள்
- ஈ-காமர்ஸ் உத்திகளைக் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள்
- அமேசான், பிளிப்கார்ட் மற்றும் மீஷோவில் விற்பனையை அதிகரிப்பது எப்படி
- ஈ-காமர்ஸ் சிறந்த விற்பனைக்கு தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உத்திகள்
- விலை நிர்ணயம், ஷிப்பிங் மற்றும் தளவாடங்களை நிர்வகிப்பதற்கான நுட்பங்கள்
- உங்கள் தயாரிப்புகளை எவ்வாறு சந்தைப்படுத்துவது மற்றும் ஆன்லைனில் உங்கள் பிராண்டை வளர்ப்பது
- உங்கள் ஈ-காமர்ஸ் வணிகத்தை திறம்பட அளவிடுவதற்கும் விற்பனையை அதிகரிப்பதற்கும் உதவிக்குறிப்புகள்
நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.
கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.
ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.