Anniversary

"உங்கள் சமூகத்தின் மதிப்பே உங்கள் செல்வத்தின் மதிப்பைத் தீர்மானிக்கிறது; வாருங்கள் மதிப்புமிக்க சமூகத்தை உருவாக்குவோம்."

 
     செப்டம்பர் 18, 2022 Suvision Holdings Private Limited நிறுவனத்தின் 14வது ஆண்டு விழா மட்டுமல்லாமல் எனது தொழில்முனைவோர் பயணத்தின் வெற்றியையும் குறிக்கிறது. நான் 7-ஆம் வகுப்பு படிக்கும்போது தான் எங்கள் ஊருக்கு மின்சார வசதி வந்தது. எனது கிராமம் மற்றும் நகரத்தில் நாங்கள் பார்த்ததை ஒப்பிடும்போது பகட்டான அல்லது ஆடம்பரமான வாழ்க்கைமுறை என்பது பற்றிய எங்கள் கற்பனை வரம்பிற்கு உட்பட்டது. ஆனால், எனது பட்டபடிப்பிற்காக கிராமத்திலிருந்து ஷிமோகா மாநகரத்திற்கு வந்தபோது, புதிய விஷயங்கள் அறிமுகமானதால் எனது கற்பனை மேலும் விரிவடைந்தது. மேலும், இன்டர்நெட்டுக்கான அணுகலைப் அறிந்து எனது வேலைக்காக பெங்களூரு மாநகரத்திற்கு வந்ததும், என்னுள் பல விஷயங்களில் மாற்றம் நிகழ்ந்தது.  
 
    குவெம்பு, U R அனந்தமூர்த்தி (ஞான பீட விருது பெற்றவர்) மற்றும் கடிடால் மஞ்சப்பா (கர்நாடகாவின் முன்னாள் முதல்வர்) போன்ற பல சாதனையாளர்களை நாட்டுக்கு தந்த இடத்தில் இருந்து வருவதால், வாழ்க்கையில் செட்டில் ஆகி விட வேண்டும் என்றில்லாமல் இயல்பாகவே வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. 
 
    ஒரு காப்பீட்டு விற்பனை பிரதிநிதியால் ஏமாற்றப்பட்ட ஆட்டோ ஓட்டுனரைச் சந்தித்தபோது, இந்தியாவில் நிதியியல் கல்வி நிறுவனத்திற்கான தேவை மற்றும் வாய்ப்பு பெரிய அளவில் இருப்பதை அறிந்தேன். எனவே, நாங்கள் இந்தியாவின் முதல் மற்றும் பெரிய நிதியியல் கல்வி நிறுவனத்தைக் கட்டமைத்தோம். எங்களது கால் சென்டர் வாயிலாக 9 மில்லியன் மக்களுக்கு நிதி அறிவைக் கற்பித்து தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், நாங்கள் மிக பெரிய அளவிலான மற்றும் நிலையான வணிகத்தை ஏற்படுத்த விரும்பினோம்.  
 
    எனவே, பல மொழிகளில் மக்களுக்கு நிதி சார்ந்த கல்வியை வழங்க ஒரு மொபைல் அப்ளிகேஷனை உருவாக்க முடிவு செய்தோம். இக்கருத்து தொடர்பாக மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள நாங்கள் முயற்சித்தோம். எனவே, நான் 3 நவம்பர், 2019 முதல் 6 மார்ச், 2022 வரை 28 முறை பைனான்சியல் பிரீடம் பயிற்சி வகுப்புகள் நடத்தி 7000 மக்களைச் சந்தித்துள்ளேன்.  
 
    பைனான்சியல் பிரீடம் பயிற்சி வகுப்பில் நாம் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் - சம்பாதித்தல், சேமித்தல், செலவழித்தல், முதலீடு செய்தல் மற்றும் கடன் பெறுதல். இதை பற்றி மக்களுக்கு விளக்கினாலும் மக்கள் வருமானத்தின் மீது மட்டும் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.  
 
     மக்கள் தங்கள் பணத்தை சிறப்பாக நிர்வகிப்பது பற்றி கற்றுத்தர நாங்கள் ffreedom.com மை உருவாக்கினோம். ஆனால், மக்கள் அவர்களது தனிப்பட்ட பயிற்சி வகுப்புகளின் போது “நாங்கள் பணத்தை எப்படி நிர்வகிப்பது என்று தெரியாமல் இல்லை, எங்களிடம் நிர்வகிப்பதற்குப் போதுமான பணம் இல்லை என்பதே” என்று எங்களிடம் கூறினார்கள். 
 
    நீங்கள் இந்தச் சிக்கலை உற்றுநோக்கினால், கடந்த இரண்டு தசாப்தங்களில் உலகம் எப்படி மாறிவிட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். தற்போது, எனது கிராமத்தில் உள்ள 5 ஆம் வகுப்பு மாணவன் நாட்டில் உள்ள பணக்காரர்களின் வாழ்க்கை முறையை அறிந்துள்ளான். இன்டர்நெட்டுக்கு நன்றி. நமது நாடு அடைந்துள்ள இந்த முன்னேற்றம் ஒரு பக்கம் எனக்கு மகிழ்ச்சியளித்தாலும் மறுபக்கம் இது ஏற்படுத்தியுள்ள சாத்தியமான பாதிப்புகள் பற்றி நான் கவலை அடைகிறேன். ஒவ்வொரு நபரும் தனது ஆசைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கான திறனைப் பெற வேண்டும் என்று நம்புகிறேன். இல்லையென்றால், அவர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள குறுக்கு வழிகளை பயன்படுத்த நேரலாம். இது சமுதாயத்திற்கு ஆபத்தாக முடியலாம்.  
 
     அரசு பள்ளிகள்/தனியார் பள்ளிகள்/ மாநில சிலபஸ்/CBSE/ICSE/IB மற்றும் கன்னடா மீடியம், ஹிந்தி மீடியம், இங்கிலிஷ் மீடியம் என்னும் பெயரில் நடைபெறும் பாகுபாடே சுதந்திர இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடியாக நான் கருதுகிறேன். அனைவருக்கும் தரமான கல்விக்கான சமமான அணுகலை நாம் வழங்கவில்லை என்றால், நாம் பாதுகாப்பாக வாழ்வதாக உணரும் ஒரு சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியாது. ஏற்கனவே நடந்ததை நம்மால் மாற்ற முடியாது என்றாலும், இதை சரி செய்ய அரசாங்கங்கள் தேவையான படிகளை மேற்கொள்ளும் என்று நான் நினைக்கிறேன். இந்த ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்பட்ட மக்களை ஒதுக்கிவிட முடியாது; அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் கட்டமைத்து கொள்வதற்கான அறிவுத்திறன் மற்றும் வாய்ப்புகளுக்கான அணுகல் தரப்பட வேண்டும்.  
 
    இந்தப் புள்ளியில் தான் நாங்கள் வெறும் நிதி கல்வி நிறுவனத்தில் இருந்து வாழ்வாதார கல்வி நிறுவனமாக மேம்படுத்திக்கொள்ள முடிவு செய்து 20 மார்ச், 2020 அன்று ffreedom app- யை அறிமுகம் செய்தோம். இன்று, ffreedom app-ல் விவசாயம் மற்றும் வணிகத்தில் வெற்றி பெற்ற 1500 மேலான வழிகாட்டிகளால் 6 மொழிகளில் கற்பிக்கப்படும் 900 மேற்பட்ட கோர்ஸ்கள் உள்ளது. கடந்த முப்பது மாதங்களில், நாங்கள் உயர்தர வாழ்வாதார கல்விக்கான அணுகலை 83 லட்சங்களுக்கும் மேலான மக்களுக்கு வழங்கி உதவியுள்ளோம். இதன் வாயிலாக சுமார் 1.65 லட்ச மக்கள் சிறு தொழில்முனைவோர்களாக மாறியுள்ளனர் என்பதில் பெருமை கொள்கிறோம். ‘  
 
    “அறிவுத்திறன் பகிர்தல் மற்றும் வாய்ப்புகள்” தேவையை மக்களிடம் பரப்ப கடந்த வருடத்தில் எங்கள் டீம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றில் சில பின்வருமாறு:
  1. ஐகான்ஸ் ஆப் பாரத் (சீசன் 1) - சிறந்த பாரதத்தைக் கட்டமைக்க 60 சிறு, குறு தொழில்முனைவோர்கள் அவர்கள் வெற்றி மற்றும் ஆர்வத்தைக் கொண்டாடுவதோடு அவர்களது அனுபவத்தை மக்களிடம் பகிர்ந்துகொள்ளும் ஒரு 28 எபிசோடுகள் கொண்ட டிவி ரியாலிட்டி ஷோ. இந்த ஷோவின் முதல் சீசன் 29 மே முதல் 11 செப்டம்பர் வரை இரவு 9.30 முதல் 10.30 வரை ஒவ்வொரு சனி & ஞாயிறுகளில் NDTV India டிவியில் ஒளிபரப்பப்பட்டது. 
  2. ffreedom ஷோ - கன்னடம் மற்றும் தெலுங்கில் உள்ள 5 டிவி சேனல்களுடன் ஒப்பந்தம் செய்து ffreedom ஷோவை தற்போது ஒளிபரப்பி வருகிறோம்.  
  3. ffreedom Nest - ffreedom app-ன் கோர்ஸுகளைப் பார்த்த பின் தங்கள் வணிக முயற்சிகளைத் தொடங்க விரும்பும் எங்கள் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான தனித்துவ முயற்சி.  
 
    இந்தச் சிறப்பான சந்தர்ப்பத்தில், நான் சிறந்த பாரத்தைக் கட்டமைக்க உதவும் எங்கள் நோக்கமான “அறிவுத்திறன் பகிர்தல் மற்றும் வாய்ப்புகள்” நிகழ்வுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பங்களித்த எங்களது 1500+ வழிகாட்டிகளுக்கு நன்றி கூறுகிறேன். குறு, சிறு தொழில்முனைவோர்களான எங்கள் 83 லட்ச உறுப்பினர்களின் தைரியத்தைப் பாராட்டுகிறேன். எங்களது அனைத்து துணிவான முடிவுகளிலும் என்னுடன் நின்ற எனது டீம் இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமில்லை. இவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது இதயத்தில் இருந்து நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இந்தச் சிறந்த காரணத்திற்கு சேவை செய்வதில் எனக்கு வழிகாட்டிய எங்கள் சேர்மனும் எனது வழிகாட்டியுமான திரு. சசி அவர்களுக்கு நான் எப்போதும் கடமை பட்டுள்ளேன். மேலும், எங்கள் மீது மாறாத நம்பிக்கை கொண்ட எங்கள் அனைத்து போர்டு மெம்பர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தத் தருணத்தில் எங்கள் முயற்சிகளை மக்களிடம் கொண்டு சேர்த்து எங்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கிய எங்கள் ஊடக நபர்களுக்கும் எனது நன்றியைக் கூறிக்கொள்கிறேன். எங்களுடன் அனைத்து விதங்களிலும் தொல்லை அளித்து தங்கள் திறனைச் சோதித்தவர்களுக்கு நன்றி கூற நான் எப்படி மறப்பேன்? அவர்களே இந்தப் பயணத்திற்கு பங்களித்து நாங்கள் வலிமை பெற உதவினார்கள். கடைசியாக, இந்த நோக்கத்தில் எனக்கு ஆதரவளிக்க பல தியாகங்கள் செய்த எனது குடும்பத்தாருக்கும் எனது நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.  
 
     இறுதியாக, எங்கள் அனைத்து நலம் விரும்பிகளுக்கும் இது ஒரு தொடக்கம் என்று கூறுகிறேன். விரைவில், வாழ்வாதார கல்வி நிறுவனத்தில் இருந்து “உலகத்திற்கான வாழ்வாதார பிளாட்பார்ம்” என நாங்கள் எங்களை மாற்றிக்கொள்வோம் என உறுதியளிக்க விரும்புகிறேன்.  
 
வாழ்த்துகளுடன்
 
C S Sudheer 
Founder & CEO, ffreedom app