கோர்ஸ்களை ஆராயுங்கள்

Our Story

எங்கள் விஷன்

"ஒவ்வொருவரும் வாழ்வாதாரம் பெறுவதை உறுதி செய்தல்."

எங்கள் நோக்கம்

1. அனைவருக்கும் வணிக வாய்ப்புகளுக்கான அணுகலை வழங்குதல்

2. சமூகம் சார்ந்த வணிகத்தில் இருந்து வாழ்வாதார வாய்ப்புகளுக்கான அணுகலை வழங்குதல்

ffreedom.com-ன் கதை

2008 தொடக்கத்தில் Thiru. C.S. Sudheer (ffreedom.com-ன் Founder, MD and CEO) ஒரு முன்னணி பன்னாட்டு பங்குச்சந்தை நிறுவனத்தில் பணிபுரியும் போது ஒரு ஆட்டோ ஓட்டுனரைச் சந்திக்க நேர்ந்தது.

Sudheer வேலை செய்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு விற்பனை பிரதிநிதி “ஒரு முறை 25,000 செலுத்தினால் 3 வருடங்கள் கழித்து 1 லட்ச ரூபாய் பெறுவீர்கள்” என்று நம்பிக்கை அளித்து ஒரு காப்பீட்டு திட்டத்தை தன்னிடம் விற்றுவிட்டதாக அந்த ஓட்டுநர் கூறியுள்ளார்.

திரு. சுதிர் அப்படி ஒரு காப்பீடு இல்லை என்பதை அறிந்திருந்தார்.

காப்பீடு ஆவணத்தைப் படித்த போது அது ஒரு வழக்கமான பிரீமியம் யூலிப் (ULIP) காப்பீடு என்பதை உணர்ந்தார். இதில் வாடிக்கையாளர் 3 வருடங்களுக்கு தலா 25,000 ரூபாய் செலுத்தவேண்டும். சந்தை செயல்பாட்டைப் பொறுத்து, 3 வருடங்களுக்கு பின் வாடிக்கையாளர் ரூ. 50,000 or ரூ. 75,000 or ரூ. 1 லட்ச ரூபாய் வரை பெறலாம்.

அப்பாவியான ஆட்டோ ஓட்டுநருக்கு காப்பீடு தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

மீதமுள்ள தவணைகளுக்காக பெங்களுருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வருடம் ரூ. 25,000 சேமிப்பது என்பது இயலாத காரியம். இந்த நிகழ்வு திரு. சுதீர் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒரு உண்மையான, நேர்மையான மற்றும் சார்பில்லாத நிதியியல் ஆலோசனைக்கான தேவையை அறிந்தார். உடனடியாக இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று எண்ணினார். எனவே, நிதி சேவைகள் துறையில் நடைபெறும் முறையற்ற நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர ffreedom.com எனும் செயலி உருவாக்கம் பெற்றது.

ஆட்டோ ஓட்டுநர், அவர் செலுத்திய பணத்தையாவது பெற வேண்டும் என்று எண்ணி திரு.சுதீர் அவர்கள், ஓட்டுநருக்கு ரூ. 25,000 கொடுத்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை CEO விடம் சமர்ப்பித்தார்.