4.4 from 417 மதிப்பீடுகள்
 1Hrs 49Min

டாட்டூ பார்லர் பிசினஸ் - மாதம் 15 லட்சம் வரை சம்பாதிக்கலாம்!

டாட்டூ வணிகம் பற்றி அறியுங்கள் மாதம் 15 லட்சங்கள் வரை சம்பாதிக்கும் திறன் பெற்று உங்கள் நிதி நிலையை மேம்படுத்துங்கள்

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

Tattoo Parlor Business Course Video
 
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(28)
விவசாயம் கோர்சஸ்(32)
தொழில் கோர்சஸ்(47)
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
1Hrs 49Min
 
பாடங்களின் எண்ணிக்கை
10 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
தொழில் வாய்ப்புகள், Completion Certificate
 
 

டாட்டூ பார்லர் கோர்ஸ் என்பது உங்கள் டாட்டூ பார்லரைத் தொடங்குவது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆர்வமுள்ள டாட்டூ கலைஞராக இருந்தாலும் அல்லது புதிய வணிக வாய்ப்பைத் தேடினாலும், இந்தக் கோர்ஸ் உங்கள் வணிகத்தைத்  தொடங்குவதற்கான சரியான வழிகாட்டி. படிப்படியான வழிமுறைகள் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், டாட்டூ கடையைத் திறப்பது மற்றும் உடல் ஓவியம் வரையும் கலைத் துறையில் வளமிக்க வணிகத்தை உருவாக்குவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

இந்தக் கோர்ஸ் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பது, தேவையான உரிமங்கள் மற்றும் அனுமதிகளைப் பெறுதல், நுண்ணுயிர் நீக்கம் மற்றும் சுகாதாரத் திட்டத்தை அமைத்தல், சரியான உபகரணங்கள் மற்றும் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் உங்கள் வணிகத்தை திறம்பட சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை வழங்குகிறது. பச்சை குத்திக் கொள்வதில் சமீபத்திய போக்குகள் மற்றும் நுட்பங்கள் மற்றும் சரியான பின் பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

சிறந்த பாடங்கள் மற்றும் பொருட்களுடன், நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடங்கும் போது உங்களுக்கு ஆதரவு தரக்கூடிய ஒத்த எண்ணம் கொண்ட தனிநபர்கள் மற்றும் நிபுணர்களின் சமூகத்தையும் அணுகலாம். நீங்கள் ஆலோசனை, உத்வேகம் அல்லது எண்ணங்களைத் தூண்டும் ஒருவரைத் தேடுகிறீர்களானால், அனைத்தையும் இங்கே பெறலாம்.

நவீன் ஒரு தொழில்துறை பொறியாளர் மற்றும் இரேசுமி டாட்டூ பார்லரின் நிறுவனர். இவர் 2006-ல் சென்னையில் தனது தொழிலைத் தொடங்கினார். தற்போது, 2  பிரான்சைஸ்களுடன் மாதத்திற்கு 18-20 லட்சம் சம்பாதிக்கும் ஒரு வெற்றிகரமான நிறுவனமாக வளர்த்துள்ளார். அவர் ஒருவரின் ஆர்வத்தைத் தொடர்வது சிறப்பான வெற்றி மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பதை நிரூபிக்கும் தொலைநோக்கு பார்வை கொண்ட தொழில் முனைவோர். நவீன், தற்போது தனது வியாபாரத்தை பிற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தி பச்சை குத்துவதன் மீதான தனது ஆர்வத்தைப் பரப்ப முயற்சிக்கிறார். இந்தக் கோர்ஸுக்கு நவீன் தான் மிகவும் பொருத்தமான வழிகாட்டி.

டாட்டூ பார்லர் வணிகக் கோர்ஸ் முடிவில், வெற்றிகரமான டாட்டூ பார்லரைத் தொடங்குவதற்கும் இயக்குவதற்கும் என்ன தேவை என்பதைப் பற்றி நன்றாக புரிந்து கொள்வீர்கள். சரியான அணுகுமுறை மற்றும் அர்ப்பணிப்புடன், உடல் ஓவியம் வரையும் கலை நிபுணராக நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதற்கு வரம்பு இல்லை. எனவே, ஏன் காத்திருக்க வேண்டும்? இன்றே உங்கள் பயணத்தைத் தொடங்கி, டாட்டூ வர்த்தகத்தில் நிபுணர் ஆகுங்கள்!

 

யார் பாடத்தை கற்க முடியும்?

  • தங்கள் வணிகத்தைத் தொடங்க விரும்பும் டாட்டூ கலைஞர்கள்

  • அதிக தேவை உள்ள தொழிலில் முதலீடு செய்ய விரும்பும் தொழில் முனைவோர்

  • உடல் ஓவிய கலையில் ஆர்வமுள்ள கற்பனைத்திறமிக்க நபர்கள்

  • டாட்டூ போட்டுக் கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தொழில் மாற்றத்தை விரும்புபவர்கள் 

  • வெற்றிகரமான டாட்டூ பார்லரை எப்படி தொடங்கி நடத்துவது என்பதை அறிய விரும்புபவர்கள்

 

பாடத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொள்வீர்கள்?

  • ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பது மற்றும் உரிமங்கள்/அனுமதிகளைப் பெறுவது உட்பட, ஒரு டாட்டூ கடையைத் திறப்பது எப்படி என அறியலாம்

  • பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலுக்கு ஏற்ற நுண்ணுயிர் மற்றும் சுகாதார நடைமுறைகள்

  • வெற்றிகரமான டாட்டூ பார்லரை நடத்துவதற்கான சிறந்த உபகரணங்கள் மற்றும் பொருட்கள்

  • வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் தேவையான பயனுள்ள சந்தைப்படுத்தல் உத்திகள்

  • டாட்டூ போடுவதில் உள்ள சமீபத்திய போக்கு மற்றும் நுட்பம், அதாவது பின் பராமரிப்பு, வாடிக்கையாளர் தொடர்பு பற்றி அறிக

 

தொகுதிகள்

  • டாட்டூ வணிகக் கோர்ஸ் அறிமுகம்: கோர்ஸுக்கு வரவேற்கிறோம் மற்றும் உள்ளடக்கம் பற்றிய அறிமுகம்.
  • உங்கள் வழிகாட்டியைச்  சந்தியுங்கள் : வழிகாட்டிக்கான அறிமுகம் மற்றும் டாட்டூ துறையில் அவர்களது அனுபவம்.
  • டாட்டூ பார்லர்களின் அடிப்படைகளை ஆராய்தல்: டாட்டூ பார்லரைத் தொடங்குவது பற்றிய பொதுவான கேள்விகள், அதாவது, இவ்வணிகத்தில் என்ன இருக்கிறது, என்ன தேவை போன்றவற்றுக்கு விடையளிப்பது.
  • உங்கள் டாட்டூ  வணிகத்திற்கான சரியான இடத்தைக் கண்டறிதல்: உங்கள் டாட்டூ பார்லருக்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியக் கருத்துகள் மற்றும் சிறந்த இடத்தைக் கண்டறிவதற்கான குறிப்புகள்.
  • டாட்டூ சேவைகள் மற்றும் தயாரிப்புகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது: டாட்டூ பார்லரில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் தயாரிப்புகள்  மற்றும் தொடங்குவதற்கு உங்களுக்கு தேவையானது என்ன என்பது தொடர்பான அறிமுகம். 
  • உங்கள் டாட்டூ வணிக  வாடிக்கையாளர்களைப் புரிந்துகொள்ளுதல் : உங்கள் இலக்கு சந்தையைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் எப்படி உங்கள் டாட்டூ பார்லருக்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பது மற்றும் தக்கவைப்பது?
  • டாட்டூ வணிக ஒழுங்குமுறைகள் மற்றும் இணக்கம் தொடர்பான  வழிசெலுத்தல்: உங்கள் டாட்டூ பார்லருக்கு தேவையான உரிமங்கள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதற்கும் சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான  படிப்படியான வழிமுறைகள்.
  • உங்கள் டாட்டூ வணிகத்தில் லாபத்தை அதிகப்படுத்துதல்: மூலதனத் தேவைகள், செலவுகள் மற்றும் லாபத்தை எப்படி கணக்கிடுவது உட்பட  ஒரு டாட்டூ பார்லரைத் தொடங்குவதற்கான நிதி அம்சங்களின் அறிமுகம்.
  • உங்கள் டாட்டூ வணிக பிராண்டை உருவாக்குதல்: உங்கள் டாட்டூ பார்லரை விளம்பரப் படுத்துவதற்கும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான நுட்பங்கள்  மற்றும் உத்திகள்.
  • உங்கள் டாட்டூ  வணிகத்தில் சவால்களை எதிர்கொள்ளுதல் : பச்சை குத்தும் துறையில் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான குறிப்புகள். மேலும், கோர்ஸின் முடிவுரை  மற்றும் இறுதி எண்ணங்கள்.

 

தொடர்புடைய கோர்சஸ்

 
Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.