இந்த கோர்ஸ்களில் உள்ளது
அறிமுகம் (Introduction)
“ஆள் பாதி ஆடை பாதி” என்பது நமது பழமையான மொழிகளில் ஒன்று. இதன் பொருள் உடை என்பது மற்றவர்களுக்கு உங்களை அறிமுகப்படுத்தும் முன் உங்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி விடுகிறது. தற்போதைய நவீன பன்னாட்டு உலகில் அனைத்து மக்களும் தங்களைச் சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். எனவே, ஆடை வணிகம் என்பது அதிக எதிர்கால வாய்ப்புள்ள துறைகளில் முக்கியமானது.
முன்பெல்லாம் அப்பா, அம்மா மற்றும் குழந்தைகள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் உடைகளை வாங்கிவிடலாம். ஆனால், தற்போது ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவருக்கும் தனி தனி சந்தை தேவைகள் உள்ளது. அதற்கேற்ப தனி தனி ஷோரூம்களில் விற்கப்படுகின்றன. ஒரு உடையின் சிறப்பு அது தைக்கப்படும் விதத்தில் உள்ளது. சிறப்பாக தைக்கப்பட்ட உடை அதிக வரவேற்பைப் பெறும்.
ஆண்களுக்கான வேட்டி, சட்டை, பேண்ட், டீ-ஷார்ட், ஷார்ட்ஸ் உடைகள் மற்றும் பெண்களுக்கான சேலை, சுடிதார், லெகாங்கே, பாவாடைகள், பேண்ட், டீ-ஷார்ட், ஷார்ட்ஸ் உடைகளுக்கு அதிக தேவை உள்ளது.