இந்த கோர்ஸ்களில் உள்ளது
உங்களுக்கு எண்ணையில் செய்த பலகாரங்கள் பிடிக்குமா? அல்லது ஆவியில் வேக வைத்த பலகாரங்கள் பிடிக்குமா? என்னும் பொதுவான கேள்வியை வைத்தால் 100 க்கு தொன்னூறு பேர் முதல் விருப்பத்தைத் தேர்வு செய்வர். அப்படி எல்லாருக்கும் பிடித்த எண்ணெய் நல்ல தரமாக இருக்கிறதா என்று மக்கள் பார்த்து வாங்குகின்றனர். குறிப்பாக, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவிட்ட இந்த நாட்களில் இயற்கையான முறையில் அதாவது பாரம்பரிய செக்கு முறையில் தயாரித்த எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.
குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய் நல்ல மணத்துடன் இருக்கும். இதை பயன்படுத்தி செய்யும் பலகாரங்கள் நிச்சயமாக நல்ல சுவையைக் கொண்டிருக்கும். மேலும், இந்த எண்ணெய்களில் உடலுக்கு நன்மை பயக்கும் நல்ல கொழுப்புகளே உள்ளது என்பது மருத்துவ உலகம் கண்டறிந்த ஒரு உண்மை. குறிப்பாக, கடலை எண்ணெய், எள் எண்ணெய் போன்றவை நமது நாட்டில் விளைந்த பருப்புகள், தானியங்களில் இருந்து எடுக்கப்படுவதால் பூகோள ரீதியாக நம் மண்ணின் உணவாக மாறுகிறது. நமது மண்ணின் உணவு கண்டிப்பாக நமக்கு பாதிப்பை தராது. அப்படிப்பட்ட செக்கு முறை எண்ணெய் பற்றி தெரிந்துகொள்வோம்.