இந்த கோர்ஸ்களில் உள்ளது
விவசாயிகளே நமது நாட்டின் முதுகுகெலும்பு என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அரசும் விவசாயிகளைக் காக்க பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், விவசாயிகள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காக்க வேண்டும் என்று எண்ணினால் அவர்களுக்கு என்று தனியாக ஒரு நிதி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று பயிரிடும் போது எதிர்பாராத சூழ்நிலைகளில் அதாவது பெய்ய வேண்டிய மழை பெய்யாமல் போவது, அறுவடை சமயத்தில் கன மழை பெய்வது, பறவைகள், பூச்சிகள் பயிர்களைத் தின்றுவிடுவது, சரியான உரங்கள் கிடைக்காமல் போவது, அதிக விளைச்சல் காரணமாக ஒட்டுமொத்த பயிர் கொள்முதல் விலை குறைந்துவிடுவது, பயிர்களுக்கு தேவையான அளவு நீர் பாசன வசதிகள் இல்லாமல் போவது போன்ற பல சிக்கல்கள் உள்ளன. ஆகவே, பெருத்த நஷ்டம் ஏற்படலாம். எனவே, இதையெல்லாம் சமாளிக்க ஒரு தனி நிதி திட்டம் தேவை. இது அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் பாதுகாக்க உதவுகிறது. அதாவது அடுத்த பயிர் விளைச்சல் வரை குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுகிறது.