இந்த கோர்ஸ்களில் உள்ளது
ஆஹா! என்ன இது மீன் போல உள்ளது. ஆனால், ஓடுகள் மற்றும் உணர் நீட்சிகளைக் கொண்டுள்ளதே. ஆம். உங்கள் யூகம் சரி. அது இறால். கடல் உணவுகளில் மீனுக்கு அடுத்து மிகவும் முக்கியமானது இறால். இது பார்ப்பதற்கு மீசை வைத்த மீன் போல இருக்கும். இது அளவில் சிறியது, ஆனால், ஊட்டச்சத்து அளவைப் பொறுத்தவரை பெரியது. இறால், இதில் இருக்கும் அஸ்டாக்சாந்தின் எனும் வேதிப்பொருள் உங்கள் உடலின் வீக்கத்தைக் குறைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும்.
இறால் வளர்ப்பு என்பது மிகவும் லாபகரமான ஒரு தொழில். இறாலில் உள்ள செலினியம் உங்கள் ஆரோக்கியமான செல்களுக்கு உதவுகிறது. ஜிங்க், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை உறுதியாக்குகிறது. எனவே, இறால் என்பது அனைவருக்கும் ஏற்ற அதிக ஆரோக்கியம் தரும் உணவு. ஒப்பீட்டளவில் பிற கடல் உணவுகளைக் காட்டிலும் இறால் மலிவானது. இறால் பண்ணை அமைத்து உற்பத்தியைப் பெரியளவில் செய்யலாம். பெரியளவிலான இறால் ஏற்றுமதி மூலம் அந்நிய செலவாணியும் பெறலாம். இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு பங்களிக்கிறது.